தார்சாலை வேண்டும்

Update: 2022-08-07 14:01 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த செம்பனார்கோவில் பகுதி மேமாத்தூர் காசான்தட்டை தெற்கு தெருவில் புதிதாக தார்சாலை போடப்பட்டது. இந்த சாலை அந்த பகுதி முழுவதும் போடப்படாமல் பாதி பகுதி மட்டுமே போடப்பட்டுள்ளது. இதன்காரமாண மீதமுள்ள பகுதி மண்பாதையாக உள்ளது. இந்த பாதை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்வதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள மீதமுள்ள பகுதிக்கும் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பாா்களா?


மேலும் செய்திகள்