உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலையும் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சர்வீஸ் சாலையை சீரமைப்பதோடு, மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.