திருச்செந்தூர் தாலுகா பரமன்குறிச்சி கிராமத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகிறது. இதில் பிள்ளையார் கோவில் அருகில் இருந்து சாலை ஆங்காங்கே பெயர்ந்து மோசமாக கிடக்கிறது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?