ஆறுமுகநேரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையானது மெயின் ரோட்டில் இருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மோசமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக ரெயில் நிலையத்திற்கு வாகனங்களில் வரும் பயணிகள் கடும் சிரமப்படுகிறார்கள். ஆங்காங்கே சாலை துண்டாகியும் கிடக்கிறது. எனவே ரெயில் நிலையத்திற்கு செல்லும் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.