விருத்தாசலம் நகரம் 4-வது வார்டு நாச்சியார்பேட்டை பிரதான சாலையில் ஆங்காங்கே மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் கற்களும் சாலையில் சிதறி கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே சாலையில் கிடக்கும் மணல் மற்றும் கற்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.