சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி பஸ் நிலையம் முன்பு குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் நடந்தன. இதற்காக கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளம் மூடப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பள்ளத்தை சரி செய்வார்களா?
-கோபால், இடங்கணசாலை, சேலம்.