குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-08-05 16:22 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த வளையபேட்டை பகுதி மேலசத்திரம் புதுதெருவில் உள்ள சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறிக்கிடக்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்

சாலை வசதி