சேதமடைந்த சாலையால் அவதி

Update: 2022-08-05 15:49 GMT
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி மு.பி.கோவில் தெரு தார்சாலை சாலையோர கால்வாய் வரை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கியும், கால்வாயில் தவறி விழுந்தும் காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலனில்லை. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்