அரியலூர் மாவட்டம், தா.பழூரில் தா.பழூர்- காரைக்குறிச்சி சாலையில் இருந்து தா.பழூர்- சுத்தமல்லி சாலையை இணைக்கும் மேலத்தெரு சாலை சிதிலமடைந்த தார் சாலையாக உள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நெல் கொள்முதல் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சிவன் கோவில், மின்சார வாரிய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்த சாலை கரடு முரடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.