சேலம் புதிய பஸ் நிலையம் அருகே மெய்யனூர் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். இதனால் இந்த சாலையில் 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று கொண்டிருக்கும். அதேபோன்று ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் அதிகம் செல்லும். இதனால் எப்போதும் அந்த சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் அந்த சாலை சேதமடைந்துள்ளதால் சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கி பல நாட்கள் ஆகிறது. ஆனால் சாலைப்பணி முடிவடையவில்லை. இதனால் புதிய பஸ் நிலையம் முதல் 3 ரோடு வரை சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.