சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து மாந்தாளி செல்லும் சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். பள்ளி-கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகம் பயணிக்கும் இந்த சாலையில் அவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.