இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை

Update: 2022-08-05 12:55 GMT

பெரம்பலூர் புதிய பஸ்நிலையம்-நகராட்சி அலுவலக பின்பகுதியில் வெங்கடாஜலபதி நகர், எம்.எம்.நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. எளம்பலூர் சாலையில் உள்ள ரோஸ்நகர், ரோஸ்கார்டன் நகர் விரிவாக்கப்பகுதியில் இருந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கும், துறைமங்கலத்திற்கு பொதுமக்கள் தற்போது ரோவர் பள்ளி சாலை வழியே இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். ரோஸ்நகர் குடியிருப்பு பகுதியை, தலையாட்டி சித்தர் ஆசிரமம் வழியாக புதிய பஸ் நிலையம், துறைமங்கலம் செல்ல வசதியாக இணைப்பு சாலை அமைத்து தரவேண்டும். இதனால் பயணநேரமும், போக்குவரத்து நெரிசலும் குறையும் எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்