சாலையை சீரமைப்பார்களா?

Update: 2022-08-05 11:37 GMT

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே பாச்சல் கிராமத்திற்கு செல்லும் பிராவு சாலை உள்ளது. அந்த சாலை தொடங்கும் இடத்தில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் தேங்கி சாலையில் பள்ளம் இருப்பது தெரிவதில்லை. அதன் காரணமாக 2 சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே அந்த இடத்தில் சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-துரைசாமி, புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்