வடிகால், வசதியுடன் சாலை வேண்டும்

Update: 2022-08-05 11:08 GMT
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுகா சித்திரையூர் கிராமத்தில் கிட்டத்தட்ட சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை மற்றும் வடிகால் வசதியும் இல்லை. மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த சாலையை பயன்படுத்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதியுடன் கூடிய சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்