திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சியில் அய்யனார் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், சேறும்,சகதியுமான பாதையினால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி புதிய சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?