கிருஷ்ணகிரியில் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-கருமலை, கிருஷ்ணகிரி.