சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி பைபாஸ் சாலையோரத்தின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. சாலை வரை மரங்கள் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது முள் குத்தும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.