கோபி மணிமேகலை வீதியில் குடிநீர் குழாய் பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டது. ஆனால் மீண்டும் ரோடு அமைக்கப்படவில்லை. இதனால் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் ரோட்டில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே மணிமேகலை வீதியில் ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.