திருச்சி மாவட்டம், முசிறி பெரியார் காவிரி பாலம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து மணமேடு, சீனிவாசநல்லூர் வழியாக தொட்டியம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் சாலை ஆரம்பிக்கும் இடமான முசிறி பெரியார் பாலத்திலிருந்து மணமேடு வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட மரண குழிகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் வாகனங்களும், சரக்கு வாகனங்களும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, மைசூரு சென்று வருகின்றன. மேலும் இதில் உள்ளூர் இரு சக்கர வாகன ஓட்டிகளும் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். சாலையில் உள்ள மரண குழிகளால் இருசக்கர வாகன ஓட்டிகளின் பயணம் தான் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.