பள்ளத்தில் சிக்கிவரும் வாகன ஓட்டிகள்

Update: 2022-08-03 14:03 GMT
திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி தியானபுரம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி மிகவும் சிரமம் அடைகிறார்கள். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்