நாகை மாவட்டம் நாகூரில் கடற்கரை முடுக்கு சாலை உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசதித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து புதிய சாலை அமைக்கபட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளுதழுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.