கிடப்பில் போடப்பட்ட தார் சாலை அமைக்கும் பணி

Update: 2022-08-02 15:53 GMT
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் இருந்து எளம்பலூர் சாலையை இணைக்கும் வகையில் தார் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜல்லி, கற்கள் போடப்பட்டது. ஆனால் இதுவரை தார் ஊற்றாமல் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவததோடு, அவர்களின் வாகனங்கள் பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்