திருவாருர் மாவட்டம் பொதக்குடி அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பஜார் மெயின்ரோட்டை கடந்து தான்மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும். இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றனர். இதன் காரணமாக பள்ளிக்கு வரும் மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் மாணவிகளுக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க ஆசிரியர்கள் சாலையோரத்தில் நின்று மாணவிகள் சாலையை கடக்க உதவி செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் மாணவிகளின் நலன் கருதி வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?