திருச்சி மாநகராட்சி எமிலி நகர் க்ராஃபோர்ட் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.