தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மூலிகை பண்ணை முதல் பிள்ளையார்பட்டி வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மாணவ-மாணவிகள் இந்த வழியாக தான் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபடவும் வழிவகுக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?