அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தார் சாலை குண்டும், குழியாக உள்ளதால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.