விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-08-01 13:27 GMT

புதுக்கோட்டை மாவட்டம்,வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வடகாட்டில் இருந்து புளிச்சங்காடு கைகாட்டி செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக பள்ளம் தோண்டப்பட்டது. அதிலிருந்து எடுக்கப்பட்ட மண், நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்பட்டு நீண்ட நாட்களாக, அப்படியே கிடப்பதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையோரம் கிடக்கும் இந்த மண் மேடு இரவு நேரங்களில் சரிவர வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்