குலசேகரம் காவல்ஸ்தலம் மூன்று முனை சாலை சந்திப்பில் குடிநீர்க் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி சாலை சேதமடைந்து வந்த நிலையில், துறை சார்ந்த ஊழியர்கள் உடைப்பை சீரமைத்துள்ளளனர். இந்நிலையில் உடைப்பு சீரமைக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் மண்ணை குவித்து வைத்து அதில் காவல் தடுப்பு வேலியையும் வைத்துச் சென்றுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் இடையூறுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறையினர் உடனடியாக சாலையில் குவித்து வைத்திருக்கும் மண்ணை அகற்றி சாலையை சீர் செய்ய முன் வர வேண்டும்.
தேவதாஸ்
குலசேகரம்