திருச்சி-கரூர் சாலையில் குளித்தலையில் இருந்து மருதூர் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே கற்களுடன் கூடிய மண் கொட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் உள்ள மண் குவியல் சாலை மீதே கொட்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மண் குவியல்களை உடனடியாக சமன் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.