புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் சாலையில் பெருங்குடி விலக்கு பகுதியில் இருந்து நெய்வாசல்பட்டி விலக்கு ரோடு வரை சாலையோரம் குளம் மற்றொரு பகுதியில் மிகப்பெரிய பள்ளம் அமைந்துள்ளதால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகம்பிகளின் பட்டைகள் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இருபுறமும் உள்ள தடுப்பு கம்பிகளை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.