சேறும், சகதியுமாக சாலை

Update: 2022-07-31 13:39 GMT

 திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், தெற்கு விஸ்வாம்பாள்சமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவில் நடந்து வரும் புனரமைப்பு பணிகளால், மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. தெருவாசிகள், குழந்தைகள் சேற்றில் நடந்து செல்லும் போது கீழே விழும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லாததால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்