விபத்துகள் ஏற்படும் அபாயம்

Update: 2022-07-31 13:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் இருந்து வேம்பங்குடி வழியாக பேராவூரணி செல்லும் சாலையில் செரியலூர் இனாம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலையில் இருந்து சற்று தூரத்தில் இருந்த மின்மாற்றியை மாற்று இடத்தில் அமைப்பதாக கூறி சாலையோரத்தில் அமைக்கும் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. மின்மாற்றியை சாலை ஓரத்தில் அமைப்பதால் சாலை விரிவாக்கம் செய்வது பாதிக்கப்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் சாலை விரிவாக்கத்திற்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் மின்மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்