நாமக்கல்-திருச்சி சாலை பெட்ரோல் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து துறையூர் சாலை 4 ரோடு பகுதிக்கு செல்ல இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை மாருதிநகர் மற்றும் பொன்விழாநகரில் குடியிருப்போர் மட்டும் இன்றி ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். 2 மாதங்கலாக இந்த சாலை திருச்சி சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு வடிகால் வசதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் குறுக்கு தெருவை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து அதிகமாக காணப்படும் நேரங்களில் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காந்தி, நாமக்கல்.