பெயர் பலகை வைக்க வேண்டும்

Update: 2022-07-31 10:43 GMT

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த நவலை கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மொரப்பூர் சாலை, கம்பைநல்லூர் சாலை, பெரமாண்டப்பட்டி சாலை ஆகிய வழித்தடங்களில் பெயர் பலகை இல்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பகுதிகளில் பெயர் பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகப்பா, நவலை, தர்மபுரி. 

மேலும் செய்திகள்