சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-30 15:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட சான சந்திரம் கடவுள் நகரில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லவும், வாகனங்கள் ஓட்டி செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைத்து மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-சி.ராமாஞ்சி ரெட்டி, சானசந்திரம், ஓசூர்.

மேலும் செய்திகள்