அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் இருந்து ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காய்ந்த எள் செடிகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் தட்டு தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.