சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-30 13:07 GMT

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே தாத்தையங்கார்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து தாத்தையங்கார்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சூழல் உள்ளது. இரவு நேரங்களில் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைவதை காண முடிகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதிர்வேல், நாமக்கல்.

மேலும் செய்திகள்