கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி

Update: 2022-07-30 12:30 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமத்தில் 6-வது வார்டில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றன. இப்பகுதியில் உள்ள தார் சாலையை சரிசெய்யும் வகையில் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் குண்டும், குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி