என்று முடியும் பழுதுபார்க்கும் பணி?

Update: 2022-05-20 17:19 GMT
சென்னை சுண்ணாம்பு கொளத்தூரிலிருந்து மடிப்பாக்கம் செல்லும் வழியில், டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள பாலத்தை பழுது பார்க்கும் பணி தொடங்கப்பட்டது. பணி தொடங்கப்பட்டு 8 மாதங்களாகிறது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இதனால் மற்ற பகுதிகளுக்கு செல்ல 2 கிலோமீட்டர் வரை சுத்தி தான் செல்லவேண்டியுள்ளது. எனவே பாலத்தை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்