புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே சோத்துப்பாளை செல்லும் விளக்கு சாலையில் இருந்து சொக்கநாதபட்டி கிராமத்திற்குள் செல்லும் ஒரு கிலோ மீட்டர் பிரதான தார் சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.