சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்

Update: 2022-07-30 11:44 GMT
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கால்நடைகள் சாலையின் ஓரங்களில் படுத்துக்கொள்வதும், அங்குமிங்கும் அலைவதும், நடு ரோட்டில் நின்றுகொண்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. மேலும் அந்த வழியாக அதிவேகத்தில் வரும் வாகனங்களால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடைகளை அப்புறப்படுத்தப்படுவதுடன், கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்