கூத்தாநல்லூரில், லெட்சுமாங்குடி பாலம் முதல் கீழபனங்காட்டாங்குடி வரை உள்ள சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக தங்களது வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த சாலையில் வெவ்வேறு இடங்களில் பல வளைவுகள் உள்ளன. ஆனால் இந்த வளைவுகளை வாகன ஓட்டிகளில் சிலர் பொருட்படுத்தாமல் வேகமாக சென்று வருகின்றனர். மேலும் சில நேரங்களில் வளைவுகளில் வாகனங்கள் செல்லும் போது எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எச்சரிக்கை பலகை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.