சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2022-07-30 09:46 GMT
வேலூர் மாவட்டம் ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம் ஆகிய கிராமங்களில் இருந்து குடியாத்தம், பேரணாம்பட்டு நகரங்களுக்கு பெரும்பாடி சாலை வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். பெரும்பாடி செல்லும் சாலையில் சிறுபாலம் கட்டும் பணி கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் அருகில் உள்ள ஒரு தனியார் நிலத்தின் வழியாகச் செல்கின்றன. 2 நாட்களாக குடியாத்தம் பகுதியில் மழை பெய்து வருவதால் தற்காலிக சாலை சேறும் சகதியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சிறு பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.இல்லையேல் தற்காலிக சாலையில் முரம்பு மண் கொட்டி சீரமைக்க வேண்டும்.
-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு. 7810046303

மேலும் செய்திகள்