செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து படிக்கட்டில் இறங்கினால் ஜிஎஸ்டி சாலை செல்லும் பாதை இருக்கிறது. மேம்பாலத்தின் அடியில் உள்ள அனைத்து பாதைகளும் ஏற்கனவே அடைக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது இருக்கும் ஒரே பாதை இது மட்டும்தான், ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் இப்பகுதி சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் இந்த பாதையில் செல்லவே பயணிகளும், பொதுமக்களும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த பாதையை சரி செய்து சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.