சேலம் யூனியன் ஆண்டிப்பட்டி ஊராட்சி 9-வது வார்டில் கிழக்கு வட்டத்தில் தார்சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலங்களில் அந்த பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும்.
-மணிகண்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.