சேலம் 51-வது வார்டு சுபரியகவுண்டர் தோட்டம் சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் டெங்கு காய்ச்சலால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி தண்ணீர் தேங்காதவாறு சாலைய சீரமைத்து கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ், சேலம்.