பெங்களூரு ஒசஹள்ளி மெட்ரோ நிலையம் அருகில் உள்ள ரூபா காம்பிளக்ஸ் சாலையில் ராஜ கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை ராஜகால்வாய் அருகே நிறுத்துகின்றனர். இதனால் அவர்கள் இரவு நேரங்களில் வேகமாக சென்று வாகனத்தை நிறுத்த முயற்சி செய்யும்போது தவறுதலாக ராஜகால்வாய் உள்ளே விழும் அபாயம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் ராட்சத குழாய்கள் மற்றும் கட்டிட கழிவுகள் போடப்பட்டுள்ளன. எனவே அந்த சாலையில் ராஜகால்வாய் அருகே தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.