சேறும், சகதியுமான சாலை

Update: 2022-07-29 14:06 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மழவராயநல்லூர் வடக்கு கிராமத்திற்கு செல்லும் மண் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி