புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி நெய்வேலி ரோடு விலக்கு சாலையில் இருந்து ரசூல்நகர் வரை செல்லும் சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.