சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-29 11:26 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதி காரைமேட்டை அடுத்த மேலச்சாலை முதல் கீழச்சாலை வரை உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை திருவாலி, நாங்கூர், கீழ சட்டநாதபுரம், மங்கைமடம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்